கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி "அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை-எளிய மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கடந்த 2012 மார்ச் மாதம் ரூபாய் 5000 தொகுப்பூதியத்தில் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 8 ஆண்டுகளாக நிரந்தரம் செய்யப்படாம லேயே பணியாற்றும் இவர்களுக்கு ஊதியமும் முறையாக உயர்த்தப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரி யர்கள் கூட்டமைப்பு தலைவர் செந்தில்குமார், “""இந்த 9 கல்வி ஆண்டுகளாக பகுதி நேரமாகவே வைத்து நடத்தி வருவது எங்களின் வாழ்வாதா ரத்தை பாதிக்கிறது. ஊதிய உயர்வும் ஆண்டொன் றுக்கு 10 விழுக்காடு கணக்கிட்டாலே ரூ 11,000 நியாயமாக கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சரிவர வழங்காததால் மிகக்குறைந்த சம்பளமாக ரூ.7,700 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் 4 ஆயிரம் பணியிடங்கள் காலியாகி தற்போது 12 ஆயிரம் சிறப்பாசிரியர்களே பணிபுரிகின்றனர். 2017-ல் எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று கல்வியமைச்சர் செங்கோட்டையன், ‘பணி நிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாக வும், விரைவில் கமிட்டி அமைப்பதாகவும் பதிலளித்தார். ஆனால் 2018-ல் ஆளும் கட்சி யான அ.தி.மு.க., உறுப்பினர்களின் கோரிக் கையை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல், "பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்ய முடியாது'’ என்றார். போராட்ட காலங்களில் பள்ளிகளை இயக்க அரசு பகுதிநேர ஆசிரியர்களையே பயன்படுத்தியதை முன்னு தாரணமாக்கி முதல்வர் சிறப்பாசிரியர்களை பணிநிரந்தரம் செய்திருக்க வேண்டும்.
கடந்த 24-ஆம் தேதி தலைமைச் செய லகத்தில் கல்வியமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கருணை மனு கொடுத்தோம். அதற்கு அவர், ""மத்திய அரசின் மனிதவளத்துறை பணம் கொடுக்கவில்லை''’என கை விரித்துவிட்டார்.
"அனைவருக்கும் கல்வித் திட்டம்' மற்றும் "இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டம்' போன்ற வற்றின்கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்த ரூ.1,627 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அது உபயோகப் படுத்தப்படாமலேயே மத்திய அரசுக்கு திருப்பி யனுப்பப்பட்டது. அதனை பணி நிரந்தரம் கோரி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் மற்ற இதே எஸ்.எஸ்.ஏ.வில் வேலை செய்யும் இதர ஒப்பந்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் பயன்படுத்தி யிருக்கலாம். சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்களில் பணிபுரிந்து வந்த 19,000 ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களின் பணி யிடங்களை நிரந்தரம் செய்து அரசாணை யை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதேபோல எங்களையும் பணி நிரந்தரம் செய்வதோடு, நிரந்தர பணியாளர்களின் நலத் திட்டங்களை எங்களுக்கும் விரிவாக்கம் செய்யவேண்டும்''’என்கிறார்.
-சுந்தரபாண்டியன்